முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உத்தரகாண்ட் ஆணையத்தால் 14 பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து!

12:32 PM Apr 30, 2024 IST | Mari Thangam
Advertisement

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 14 ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி உரிமத்தை உத்தராகண்ட் மாநிலத்தின் மருத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்துள்ளது.

Advertisement

பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலக்ரிஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். 

அந்த விளம்பரத்தில், ’நாங்கள் நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டுள்ளோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம்’ என்று கூறியிருந்தார் ராம்தேவ். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், உஙக்ள் தயாரிப்பு பொருட்களின் விளம்பரத்தைப் போல மன்னிப்பு விளம்பரமும் பெரிய அளவில் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையாடுத்து முழு பக்க மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டது. பொய்யான விளம்பரங்களின் மீது மத்திய அரசும், உத்தராகண்ட் அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்தும், மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Patanjali productsUttarakhand Commissions
Advertisement
Next Article