”திருமணத்திற்கு முன்பு ஒத்திகை பார்க்கலாம் வா”..!! இளம்பெண்ணை ரூமுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
சென்னை மணலியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு, திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடியுள்ளனர். இதற்காக மகளின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் சுய விவரங்களை பிரபல திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு புதிய அழைப்புகள் வந்துள்ளது.
அந்த வகையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டையை சேர்ந்த பூர்ணநாதன் (28) என்பவர் அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளார். அவர் அந்த பெண்ணிடம் தான் ஒரு என்ஜினியர் என்றும் சென்னை விடுதியில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், பூர்ணநாதனின் வசீகர பேச்சு மற்றும் அணுகுமுறையால் பெண் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்து போனது. இதனால் அந்த பெண்ணும் பூர்ணநாதனும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பூர்ணநாதன், அதிகாலையில் உன்னை பார்த்து ரசிக்க வேண்டும் என்று அழைத்துள்ளார். வருங்கால கணவர் தானே என நினைத்து வீட்டில் சொல்லிவிட்டு வந்துள்ளார். மேற்கு மாம்பலத்தில் பூர்ணநாதன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த இளம்பெண்ணுக்கு அப்போதுதான் நடக்க போகும் சிக்கல் தெரிந்தது.
வீட்டில் நுழைந்தவுடன் கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். எப்படியும் நாம் கணவன்-மனைவியாக வாழப்போகிறோம். அதற்கு முன் நாம் ஒத்திகை பார்க்கலாம் என்று இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பூர்ணநாதன் ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார். பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியையும் பறித்துக் கொண்டாராம்.
தொடர்ந்து பூர்ணநாதனின் நடவடிக்கையை கண்டு வெகுண்டெழுந்த பெண், சென்னை குமரன் நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளார். அதன் பேரில் குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூர்ணநாதனை கைது செய்தனர். திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு போக வேண்டிய மாப்பிள்ளை, திருமணத்திற்கு முன்பே அவசரப்பட்டதால் ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
Read More : இதை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பறந்து போய்விடும்..!! அதுவும் இப்படி சாப்பிட்டு பாருங்க..!!