தமிழகமே...! புயலுக்குப் பிறகு செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன...? தெரிஞ்சுக்கோங்க...
புயலுக்குப் பிறகு செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்றுவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலுக்குப் பிறகு செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை:
வீட்டுக்குள் மின்சாரம் எரிவாயுவை அணைக்கவும், கதவுகள் ஜன்னல்களை மூடி வைக்கவும், பழுதடைந்த வீடாக இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். கொதிக்க வைத்த அல்லது குளோரின் கலந்த குடிநீரைப் பருகுங்கள், அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புங்கள், சேதமடைந்த கட்டிடத்தின் அருகில் செல்லாதீர்கள், உடைந்த மின் கம்பங்கள்/அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லாதீர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.