முருங்கை ஓகே.. அதென்ன முள்ளு முருங்கை? கொட்டிக்கிடக்கும் பலன்கள்.. இந்த இலையை இப்படி சாப்பிடுங்க..
உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் முள்ளு முருங்கையை பலரது வீடுகளிலும் அடிக்கடி சமைப்பது இல்லை. கல்யாண முருங்கை என்று அழைக்கப்படும் இந்த முள்ளு முருங்கையில் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்தை அழிக்கும் இந்த முள்ளு முருங்கையை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும், என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதையும் குறித்து பார்க்கலாம்?
1. இந்த முள்ளு முருங்கையை தோசை மாவுடன் சேர்த்து தோசையாகவோ அல்லது பூரியாகவோ செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஒரே நாளில் குணமாகிவிடும்.
2. 21 நாட்கள் தொடர்ந்து முள்ளு முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொண்டால் ஆண்மை குறைபாடு பிரச்சனையை சரி செய்து விந்துவில் உள்ள உயிரணுவை அதிகரிக்கும்.
3. மாதுளை சாறுடன் கசகசா பொடி செய்து முள்ளு முழங்கையுடன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர குழந்தையின்மை பிரச்சனை சரியாகும்.
4. பெண்களுக்கு கருப்பையில் கட்டி, நீர்க்கட்டி, PCOD பிரச்சனை உள்ளவர்கள், தைராய்டு போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.
5. மாதவிடாயின் போது ஏற்படும் வயிறு வலி, அதிகமான ரத்தப்போக்கு, மாதவிடாயின் போது ஏற்படும் காய்ச்சல், வாந்தி போன்றவற்றையும் சரி செய்கிறது.
6. கர்ப்பிணி பெண்கள் முள்ளு முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும்.
7. தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும் பெண்களுக்கு முள்ளு முருங்கை கீரையை பூண்டுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய முள்ளு முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Read more ; புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்.. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!