For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நமது மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்" அமெரிக்காவின் 47வது அதிபரான ட்ரம்ப்க்கு மோடி வாழ்த்துக்கள்…!

'Let's strive for the progress of our people' Modi congratulates Trump, the 47th president of America...!
02:32 PM Nov 06, 2024 IST | Kathir
 நமது மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்  அமெரிக்காவின் 47வது அதிபரான ட்ரம்ப்க்கு மோடி வாழ்த்துக்கள்…
Advertisement

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். அமெரிக்காவில் ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. தேர்வுக் குழு உறுப்பினர்கள் எனப்படும் எலெக்ட்ரோல் காலேஜ் முறைப்படி தான் வாக்குப்பதிவு நடைபெறும்.

Advertisement

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். ஆரம்பம் முதலே டிரம்ப் கமலா ஹாரிஸ்க்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு 270 எலெக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 277 வாக்குகளை உறுதி செய்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தனது நண்பரான டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடியின்பதிவில், "உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றிக்கு எனது நண்பரான டிரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, ​​இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன். .ஒன்று சேர்ந்து, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காகவும் பாடுபடுவோம்." என்று பதிவிட்டுள்ளார்.

Read More: LMV ஓட்டுநர் உரிமம் உள்ளவர் 7,500 கிலோ வரை எடை கொண்ட வாகனத்தை ஓட்டலாம்..!! – உச்ச நீதிமன்றம்

Tags :
Advertisement