முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள்..!! கடந்த 5 பிறந்தநாள்களை அவர் எப்படிக் கொண்டாடினார்?

Let's see how Narendra Modi, who is holding the post of Prime Minister of India for the third time, has celebrated his last 5 birthdays.
06:30 AM Sep 17, 2024 IST | Mari Thangam
Advertisement

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்து வரும் நரேந்திர மோடி, தனது கடந்த 5 பிறந்தநாள்களை எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

Advertisement

செப்டம்பர் 17, 1950-ல் தாமோதர் தாஸ் மோடி-ஹீராபா மோடி தம்பதிக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத் மாநிலத்தில் மிக நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற தனிச்சிறப்பு கொண்டவர். தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். இவர் தனது கடந்த 5 பிறந்தநாள்களை எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2023;

2023 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பாரம்பர்ய தொழில்களின் திறன் மூலம் பொருளீட்ட உதவும் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டமும், 'ஆயுஷ்மான் பவா' என்ற புதிய சுகாதார பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2022;

தென்னாப்பிரிக்க நாடான நமீபியாவுடனான ஒப்பந்தப்படி, நமீபியா அரசு எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியது. சிறப்பு விமானத்தில் ஐந்து பெண், மூன்று ஆண் சிறுத்தைகள், நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்துக்கு எடுத்துவரப்பட்டன. பிரதமர் மோடி தன் பிறந்தநாளை முன்னிட்டு சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். அப்போது ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, பிரதமர் சிறுத்தைகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படம் வைரலானது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2021;

2021-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 1.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தியது. அதற்கு முன்பு ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும், 1.5 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2020;

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை ஒரு வாரம் சப்த சேவா தினமாகக் கொண்டாட வேண்டும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். ஒவ்வொரு மண்டலத்திலும் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால் மற்றும் உபகரணங்கள் வழங்குவது, எளியோர் 70 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குவது, மருத்துவமனைகள், ஏழை மக்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்று 70 பேருக்கு பழங்கள் வழங்குவது, தேவைக்கேற்ப கொரோனா நோயாளிகள் 70 பேருக்கு பிளாஸ்மா தானம் வழங்கி, பா.ஜ.க-வினர் பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2019;

பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளை குஜராத் மாநிலத்தில் செலவிட்டார். நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்றார். சர்தார் சரோவர் அணை தனது முழுக்கொள்ளவை எட்டியதால் நடைபெற்ற பூஜைகளிலும், நமாமி நர்மதே பண்டிகையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

மேலும் வாசிக்க : கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்..!! பள்ளி கல்லூரிகள் மூடல்.. இனி முகக்கவசம் கட்டாயம்!!

Tags :
celebrated his last 5 birthdayshappy birthday narendra modiindianarendra modi
Advertisement
Next Article