For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொரோனாலாம் சும்மா..!! கொடிய வைரஸாக மாறும் H5N1..!! மரணம் உறுதி..!! மருத்துவர்கள் பகீர்..!!

07:19 AM Apr 06, 2024 IST | Chella
கொரோனாலாம் சும்மா     கொடிய வைரஸாக மாறும் h5n1     மரணம் உறுதி     மருத்துவர்கள் பகீர்
Advertisement

உலகளவில் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என இரு முறையில் இந்த நோய் பாதிப்பில் சிக்கி மீண்டவர்களும் உள்ளனர். பல லட்சம் பேரின் உயிரை பறித்த இந்த வைரஸ், உலகளவில் பொருளாதாரத்தையும் நிலைகுலைய செய்தது. இந்த நோயின் ருத்ர தாண்டவம் தாங்காமல் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தன.

Advertisement

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனாவின் தாண்டவம், பல மாதங்களுக்கு தொடர்ந்தது. இதனால், கிடுக்கிப்பிடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. பிறகுதான் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு தற்போதுதான் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்!

H5N1 என்ற புதிய பறவைக்காய்ச்சல், சர்வதேச நோய் பரவலாக மாறலாம் என மருத்துவ அறிஞர்கள் பகீர் கிளப்பியுள்ளனர். இந்நோய் கொரோனா நோய் பரவலை விட 100 மடங்கு கொடியதாக இருக்கும் எனவும், இறப்பு விகிதமும் கொரோனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நோய் பாதிப்பு, உலகளவில் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

H5N1 பறவைக்காய்ச்சல், பாலூட்டி இன விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த நோய் ஏற்கனவே பல்வேறு வகைகளில் பரவ ஆரம்பித்து விட்டதாகவும் இன்னொரு கொடிய நோய்க்கு நம்மை நாம் தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். டெக்ஸாசில் உள்ள ஒருவருக்கு H5N1 வைரஸின் ஒரு நோய் வகையான ஏவியன் இன்ஃப்ளுவன்ஸா என்ற பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், இது அவருக்கு மாடுகளிடம் இருந்து பரவியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவை விட கொடிய நோய் பாதிப்பு

உலக சுகாதார மையத்தின் தரவுகளின் படி, 2003இல் இருந்து, H5N1 வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம், இந்த நோய் வந்தவர்களில் 50% பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. ஆனால், கொரோனா நோய் பாதிப்பின் போது உயிரிழப்பு விகிதம் 0.1 சதவிகிதமாக இருந்து, பின்னர் 20 சதவிகிதமாக மாறியது.

H5N1 ஃப்ளூ என்றால் என்ன?

இந்த வைரஸ் நோய் பாதிப்பு பெரும்பாலும் பறவைகளைத்தான் தாக்கும். H5N1 வைரஸ், கோழி போன்ற பறவைகளை வளர்க்கும் பண்ணைகளில் இருந்து பரவுமாம். மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டி உயிரினங்களுக்கும் (Mammals) இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. பறவையின் எச்சம் அல்லது நோய் பாதிப்பு ஏற்பட்ட பறவையுடன் நேரடி தொடர்பில் இருந்தால் இந்த நோய் எளிதில் பரவி விடும்.

H5N1 நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் :

* காய்ச்சல்

* இருமல்

* தொண்டை வலி

* குளிர் காய்ச்சல்

* மூச்சு விடுவதில் சிரமம்

Read More : திடீர் திருப்பம்..!! பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு..? NIA கிடுக்குப்பிடி விசாரணை..!!

Advertisement