For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'800 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.32 லட்சம் கோடி சொத்து...' தேடி வருபவர்களுக்கு தங்கக் கட்டி..!! யார் இந்த 'தங்க' ராஜா?

04:57 PM May 29, 2024 IST | Mari Thangam
 800 ஆண்டுகளுக்கு முன்பே ரூ 32 லட்சம் கோடி சொத்து     தேடி வருபவர்களுக்கு தங்கக் கட்டி     யார் இந்த  தங்க  ராஜா
Advertisement

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு யார் உலகின் முதல் பணக்காரர் என்ற பட்டியலும் வெளியிடப்படுகிறது. அதன்படி இப்போதைக்கு உலகின் முதல் பணக்காரராக கருதப்படுகிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க். அவருடைய இன்றைய சொத்து மதிப்பு 234 பில்லியன் அமெரிக்கா டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

Advertisement

இவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களை விட ஒருவர் மிக அதிகமாக அதுவும் 800 ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். 14 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டை ஆண்ட பேரரசர் மான்சா மூசா தான் அந்த நபர். அப்போதே அவரின் சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 32 லட்சம் கோடி ரூபாய். அவர் தான் இன்றுவரை உலகின் பெரும் பணக்காரர்.

யார் இந்த மான்சா மூசா?

மான்சா மூசா 1280 ஆம் ஆண்டு பிறந்தார். 1312 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பரிக்காவில் இருக்கும் வாஸ்ட் மாலி என்ற நாட்டின் அரசாராக  முடி சூட்டிக் கொண்டார். அவரின் ஆட்சிக்குட்பட்ட நாட்டின் எல்லை தற்போதைய ஐவரி கோஸ்ட், செனகல், மாலி மற்றும் புர்கினோ  பாசோ வரை நீண்டிருந்தது. திம்புக்டு வாசா என்ற நகரை தலைநகராக கொண்டு மான்சா ஆட்சி நடத்தினார். அவரின் முக்கிய வருமானம் தங்கம் மற்றும் உப்பு ஏற்றுமதி தான்.

தேடி வந்தால் தங்கம்

தங்கத்தையும் உப்பையும் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார் மான்சா மூசா. தன்னைத் தேடி வருபவர்களுக்கு எல்லாம் தங்க கட்டிகளைத்தான் தானமாக கொடுப்பாராம். இவருடைய சொத்து மதிப்பை தாண்டி சொத்து சேர்த்தவர்கள் இன்று வரை உலகில் யாரும் இல்லை.

அவருடைய  தாராள குணம் தான் அவருக்கும் பெரும் புகழையும், பெயரையும் தேடித்தந்திருக்கிறது. வாரி வழங்கும் வள்ளலான மூசாவை அவரின் குடிமக்கள் அரசருக்கு எல்லாம் அரசர் என்று தான் அழைப்பார்களாம். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் தகவல்படி மூசாவினுடைய ஆட்சிக் காலத்தில் உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் மூசா தான்.

மெக்காவிற்கு புனித யாத்திரை ;

1324 ஆம் ஆண்டு மான்சா இப்போதைய சவுதி அரேபியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அவருடைய இந்தப் பயணம் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் சென்ற வாகனம் தான் இதுவரை சகாரா பாலைவனத்திற்குள் சென்ற மிகப்பெரிய வாகனமாகவும் கருதப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது மூசா தன்னுடன் 100க்கும் மேற்பட்ட ஒட்டகங்களையும், ஏராளமான தங்கத்தையும் கொண்டு சென்றிருக்கிறார். அதோடு இவருக்கு பணிவிடை செய்ய 12 ஆயிரம் வேலைக்காரர்கள் உடன் சென்றிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்தப் பயணத்தின்போது மூசா தன்னுடன் 8 ஆயிரம் பேரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

Read More ; மக்களே உஷார்..!! ஆவினில் காலாவதியான பிஸ்கட் விற்பனை..!! ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
Advertisement