For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாம்பு கொடுத்தால் தான் கல்யாணம்... வினோத சடங்குகளை பின்பற்றும் மக்கள்..!! எங்கு தெரியுமா?

Let's look at a village in India that follows the traditional practice of giving snakes as dowry to the bridegroom at the time of marriage.
06:31 PM Aug 27, 2024 IST | Mari Thangam
பாம்பு கொடுத்தால் தான் கல்யாணம்    வினோத சடங்குகளை பின்பற்றும் மக்கள்     எங்கு தெரியுமா
Advertisement

இந்தியாவில் திருமணத்தின் பொழுது பாம்புகளை வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கும் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றிவரும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.

Advertisement

ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில் சில சமூகத்தினர் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் விசித்திரமாகவும், அச்சரியமாகவும் இருக்கும். அந்தவகையில், சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள சன்வாரா பழங்குடியினர் அவர்கள் சமூகத்தில் நடைபெறும் திருமணங்களில் ஒரு விசித்திரமான பாரம்பரிய பழக்க வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். பொதுவாக திருமணம் நடைபெறும் பொழுது வரதட்சணை கொடுக்கப்படுவது வழக்கம். சன்வாரா பழங்குடியினர் தங்களுடைய பிள்ளைகள் திருமணத்தின் பொழுது வரதட்சணையாக பாம்புகளை கொடுக்கிறார்கள். பழங்காலம் முதலே பின்பற்றிவரப்படக்கூடிய இந்த பாரம்பரியம் இப்பொழுதும் மிக முக்கியமானதாக திருமணங்களில் நடைபெறுகிறது.

மணமகள் திருமணம் முடிந்த பிறகு 9 வெவ்வேறு வகையான பாம்புகளை மணமகனின் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி எடுத்துச் செல்ல தவறினால் அந்த திருமணம் முழுமை அடையாது என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. பாம்புகள் சமூகத்தின் இயல்பான அங்கம் எனவும் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றவுடன் அவளுடைய பெற்றோர் பல்வேறு வகையான பாம்புகளை அந்த பெண்ணுடன் கொண்டு செல்வதை உறுதி செய்வதாகவும் இந்த பழங்குடியின இனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல இந்த சமூகத்தினர் பாம்பு பிடிப்பவர்கள் என்பதால் இவர்களுடைய குழந்தைகளுக்கு கூட பாம்பு பிடிக்க தெரியும் என்கிறார்கள். குழந்தைகள் பாம்புகளைப் பிடித்து அவைகளுடன் விளையாடுவார்கள் என சொல்கிறார்கள். பாம்புகளை வரதட்சணையாக கொடுப்பது இவர்களுடைய சமூகத்தில் மிக முக்கியமான ஒரு பாரம்பரிய வழக்கம். இவர்களுடைய முன்னோர்கள் வரதட்சணையாக 60 பாம்புகளை கொடுத்துள்ளார்கள்.

அது தற்பொழுது குறைந்து 21 பாம்புகளை கொடுக்கிறோம் என சொல்கிறார்கள். திருமணத்தில் இந்த முக்கியமான வரதட்சணையை கொடுக்காவிட்டால் அந்த சமூகத்தில் அந்த திருமணம் நடைபெறாது. அதனால் பாம்புகளை எப்படியாவது தேடி கண்டுபிடித்து திருமணத்தில் வரதட்சணையாக கொடுக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்த வழக்கத்தை இந்த கிராம மக்கள் பின்பற்றி வருவது ஆச்சரியமாக உள்ளது.

Read more ; இனி வீடு வாங்கவே முடியாது போலயே..!! அதிரடியாக உயர்ந்த விலை..!! எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement