முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முஸ்லிம்களின் 4 % இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்...! மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு...!

06:30 AM Nov 21, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து, பட்டியலினத்தவருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் பிரித்து வழங்குவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா; தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஹைதராபாத் விடுதலை நாளை கொண்டாடுவதற்கு அஞ்சுகிறார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி மீதான அச்சமே இதற்குக் காரணம். பாஜக ஆட்சிக்கு வந்தால், ரசாக்கர்ஸ் இடமிருந்து ஹைதராபாத் விடுவிக்கப்பட்ட தினத்தை தெலங்கானா தினமாக கொண்டாடப்படும்.

மேலும் தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அந்த 4 சதவீதத்தை SC,ST,BC மக்களுக்கு பிரித்துக் கொடுப்போம். SC இடஒதுக்கீட்டில் இருந்து மடிகா சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என கூறினார்.

Tags :
amit shahBjp GovtMuslim reservationTelengana
Advertisement
Next Article