முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”விடுங்க அண்ணா.. ஸ்கூலுக்கு போகணும்”..!! பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து பாலியல் பலாத்காரம்..!!

04:30 PM Nov 17, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பகுதிகளில் போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும் தான் சென்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல 8ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த பள்ளி மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், ஒருவழியாக தப்பித்து வந்த பள்ளி மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags :
8ஆம் வகுப்பு மாணவிநெல்லை மாவட்டம்பள்ளி மாணவிபாலியல் பலாத்காரம்
Advertisement
Next Article