முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு..!!

The Speaker has announced that the Tamil Nadu Legislative Assembly session will begin in January every year and the Governor will read the speech approved by the Cabinet.
02:20 PM Dec 20, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த உரையை ஆளுநர் படிப்பார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 3 ஆண்டுகளாகவே ஆளுநர் ரவி தனது உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லையென்றும், பெரியார் பெயரை புறக்கணித்தும் படித்தார். இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் முக.ஸ்டாலின் எதிர்ப்பு தீர்மானமும் கொண்டுவந்தார்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையோடு சட்டப்பேரவை தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த இருப்பதாக கூறினார். மேலும், இந்தாண்டு ஆளுநர் உரையை முழுவதுமாக படிப்பார் என்று நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, சொந்த கருத்துகளை கூற அல்ல. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி உண்டு. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். சட்டப்பேரவைக்கும் இது பொருந்தும் என தெரிவித்தார். மேலும், இந்த ஆளுநர் உரை கூட்டமானது எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Read More : அண்ணாமலைக்கு சிக்கல்..!! தலைவர் பதவி பறிபோகிறதா..? மீண்டும் தமிழிசையா..? கூட்டத்தில் கேட்ட கோஷம்..!! செம டென்ஷனாம்..!!

Tags :
ஆளுநர்சபாநாயகர் அப்பாவுதமிழ்நாடு சட்டப்பேரவை
Advertisement
Next Article