For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Andhra Pradesh: சட்டப்பேரவை தேர்தல்!… 99 வேட்பாளர்களின் முதல் பட்டியலை டிடிபி-ஜேஎஸ்பி கட்சிகள்!

09:34 AM Feb 25, 2024 IST | 1newsnationuser3
andhra pradesh  சட்டப்பேரவை தேர்தல் … 99 வேட்பாளர்களின் முதல் பட்டியலை டிடிபி ஜேஎஸ்பி கட்சிகள்
Advertisement

Andhra Pradesh: ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 99 வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜேஎஸ்பி கட்சிகள் அறிவித்துள்ளன.

Advertisement

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றன. மறுபுறம், கூட்டணி, பிரசாரம், வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் (டிடிபி) பவன் கல்யாண் தலைமையிலான அதன் கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சியும் (ஜேஎஸ்பி) ஆந்திரப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 99 வேட்பாளர்களின் ஒருங்கிணைந்த பட்டியலை நேற்று அறிவித்தன.

இதுகுறித்து அமராவதியில் உள்ள உண்டவல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, “இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, 175 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 24 இடங்களில் ஜேஎஸ்பி போட்டியிடும். மேலும், மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஆந்திர தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் இணைந்து முதல்கட்டமாக 118 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். 118 பேர் கொண்ட இந்த பட்டியலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 94 பேர்களும், ஜன சேனா சார்பில் 24 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதியில் மீண்டும் களமிறங்க உள்ளார். பா.ஜ., கூட்டணியில் இணைந்தால், சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 154 தொகுதிகளில் இருந்து பிரித்து கொடுப்பார் என அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Readmore:

Tags :
Advertisement