தேர்தல் வாக்குப்பதிவின்போது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கட்டத்தின் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களுக்கு தனியார், அரசு நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : பாமக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாத அன்புமணி..!! கடலூரில் தங்கர் பச்சான்..!! முழு விவரம் இதோ..!!