'உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுங்கள்'!. இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Indian embassy: இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், லெபனானை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்வாறான நிலையில், அங்கு வசிக்கும் தனது குடிமக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, மறு அறிவிப்பு வரும் வரை லெபனானுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசமான சூழ்நிலையிலும் இங்கு தங்க விரும்புபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மக்களின் உதவிக்காக உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லெபனானில் ஏற்கனவே உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்த காரணத்திற்காகவும் அங்கு இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கவும்" என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது எங்கள் மின்னஞ்சல் ஐடி மூலம் எங்களை தொடர்பு கொள்ள: cons.beirut@mea.gov.in அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128 மூலம் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானிய குடிமக்களை லெபனானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Readmore: எப்போதும் 20 வயது இளமை!. சீனர்கள் கடைபிடிக்கும் 7 பழக்கவழக்கங்கள்!