லட்டு விவகாரம்..!! திருப்பதியில் திடீரென நடத்தப்படும் சாந்தி யாகம்..!! என்ன காரணம்..?
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அங்கே சாந்தி யாகம் நடத்தப்படுகிறது.
திருப்பதி லட்டு தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த புகார் தற்போது உண்மையாகியுள்ளது. லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அதாவது, 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியுள்ளனர். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இச்சம்பவத்தால், மக்கள் பலரும் கொதித்து போய் உள்ளனர். இதையடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அங்கே சாந்தி யாகம் நடத்தப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 'சாந்தி யாகம்' கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனியாக உள்ள உள்ள யாக சாலையில் ஜீயர்கள் யாகம் செய்கின்றனர். கோவில் தலைமை பூசாரியும் யாகத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் இணைந்து 'சாந்தி யாகம்' நடத்தப்படுகிறது.
Read More : ‘சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை’..!! மணிமேகலையின் வீடியோவுக்கு பதிலடி கொடுத்த குரேஷி..!! வெடித்த சண்டை..!!