கல்லால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை நீரில் மிதக்கும் அதிசயம்.! இந்த கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?
இந்தியாவில் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களையும் அதன் வரலாறுகளையும் பார்க்கும்போது நமக்கு பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த காலத்தில் கட்டிட கலையில் நம் முன்னோர்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த கோயில்கள் இருந்து வருகின்றன. இந்த வகையில் நீரில் மிதக்கும் அதிசய விஷ்ணு சிலையை கொண்ட கோயிலை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்
நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு என்ற இடத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த புத்தானிகந்தா கோயில். இந்த கோயிலில் உள்ள கல்லால் செய்யப்பட்ட விஷ்ணு சிலை ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு சிலைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட விஷ்ணு சிலை நீரில் மிதப்பது இந்த புத்தாணிகந்தா கோயிலின் சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.
இந்த சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால் நீரில் இருந்து 14 அடி உயரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட விஷ்ணு சிலை மிதப்பது தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்து வருகிறது. ஏழாம் நூற்றாண்டில் நேபாளத்தை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை வடிவமைத்ததாக கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஷ்ணு சிலை நீரில் மிதந்தாலும் தினமும் கடவுளுக்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. கோயிலின் இந்த சிறப்பு அம்சங்களை பார்ப்பதற்காகவே பக்தர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.