முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோய் நொடிகளை தீர்த்து நலம் தரும் தன்வந்திரி கோயில்.! எங்கு உள்ளது தெரியுமா.!?

07:55 AM Feb 01, 2024 IST | 1newsnationuser5
Advertisement

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். வாழ்வில் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் நோயில்லாத வாழ்வே பெரும் செல்வமாக கருதப்படுகிறது. இந்த நோய் நொடி இல்லாத வாழ்விற்கு தன்வந்திரி பகவானை வழிபட்டு தன்வந்திரி மந்திரம் சொல்லி வர வாழ்வில் நலம் பெருகும்.

Advertisement

தன்வந்திரி பகவான் என்பவர் ஆயுர்வேத மருத்துவர்களின் கடவுள் என்றும், தேவர்களின் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு பல்வேறு நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவானுக்கு கோயில்கள் மிகவும் குறைவு ஆனால் பண்ருட்டியில் இருக்கும் தன்வந்திரி பகவான் ஆலயம் மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன்பாக பெருமாளின் தீவிர பக்தர் ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் பக்தர் பெருமாளை தரிசிக்க முடியாமல் மிகவும் வருத்தம் அடைந்தார். பின்பு அவர் இருந்த இடத்திலேயே தன்வந்திரி பகவானை வேண்டி "என்னை நோய் நொடியில் இருந்து மீட்டெடுப்பாய் என் பகவானே" என்று கேட்டுள்ளார். இதன் பலனாகவே விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விட்டாராம். இதனாலையே அந்த இடத்தில் தன்வந்திரி பகவான் கோயில் அமைக்கப்பட்டது என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

மேலும் எந்த கோயிலிலும் இல்லாத அளவிற்கு தன்வந்திரி பகவான் ஆலயத்தில் அர்த்த ஜாமத்தில் பூஜை நடைபெறும். அந்த பூஜையில் நாட்டு வைத்தியரை கொண்டு தயாரிக்கப்பட்ட அமிர்த கசாயத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர். இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் வாழலாம் என்பது இக்கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Tags :
templeதன்வந்திரிநோய்களை தீர்க்கும் கோவில்
Advertisement
Next Article