முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சில்க் ஸ்மிதா தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?

last-letter-by-silk-smitha
05:34 PM Dec 03, 2024 IST | Saranya
Advertisement

40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகை என்றால் அது கண்டிப்பாக சில்க் ஸ்மிதாவாகத் தான் பெரும்பாலும் இருக்கும். தனது கவர்ச்சியின் மூலம், தென்னிந்திய சினிமாவையே கலக்கியவர் தான் சில்க் ஸ்மிதா. 1960- ஆம் ஆண்டு, டிசம்பர் 2 ஆம், ஏலூரில் உள்ள கோவள்ளி கிராமத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், படிக்க வசதி இல்லாததால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். வயிற்று பிழைப்புக்காக கூலி வேலை செய்த இவர், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது கணவர் செய்யும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத அவர், சென்னைக்குச் சென்றுவிட்டார்.

Advertisement

சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இவர், சினிமாவில் வேலை செய்பவர்களின் காலில் விழுந்து கூட வாய்ப்புகளுக்காக முயன்றார். ஒரு கட்டத்தில், வேலைக்காரியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, கதாநாயகியாக நடித்து, பின்பு கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானார். சினிமாவில் உச்சகட்ட புகழ்ச்சியை அடைந்த இவர், லட்சங்களில் சம்பாதித்தார். முன்னணி நடிகர்களுக்கு ஈடான புகழை பெற்ற இவர், இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், தன்னைப் பயன்படுத்தி கொண்டு பலரும் தன்னை ஏமாற்றியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஓர் அபலை பெண் என்று கடிதத்தை தொடங்கிய அவர், "கடவுளே, என் 7 வயதிலிருந்தே வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எனக்குச் சொந்தமானவர்கள் யாரும் இல்லை. நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினர். பாபுவைத் தவிர என் மீது யாருக்கும் அன்பு இல்லை. பாபுவைத் தவிர மற்ற அனைவரும் என் கஷ்டத்தையும், பணத்தையும் சாப்பிட்டவர்கள் தான்.என் ஆசைகள் அனைத்தையும் ஒருவர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றினார். கடவுள் இருந்தால் அவரைப் பார்த்துக்கொள்வார். தினசரி இதனால் ஏற்படும் சித்திரவதையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ராமு, ராதாகிருஷ்ணன் என்னை மிகவும் துன்புறுத்தினர். இதை எழுதுவதற்கு நான் எவ்வளவு நரக வேதனை அனுபவித்தேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வாழ்க்கையில் பல கொடுமைகளுக்கு மரணம்தான் நிரந்தரம் என்று தோன்றுகிறது." என்று எழுதி இருந்துள்ளார். சினிமாவில் இத்தனை புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா, இறந்தபோது திரையுலகிலிருந்து நடிகர் அர்ஜுனை தவிர யாரும் செல்லவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Read more: மறந்தும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுத்து விடாதீர்கள்..

Tags :
deathlettersilk smitha
Advertisement
Next Article