For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

12 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்த 17 லட்சம் பேர்.! குஜராத்திகளுக்கு 3-ம் இடம்.! பதற வைக்கும் புள்ளி விவரம்.!

07:59 PM Dec 30, 2023 IST | 1newsnationuser4
12 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்த 17 லட்சம் பேர்   குஜராத்திகளுக்கு 3 ம் இடம்   பதற வைக்கும் புள்ளி விவரம்
Advertisement

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நம் நாட்டில் இருந்து படிப்பு மற்றும் வேலைக்காக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் மற்றும் வசதிகள் கிடைத்ததும் அங்கேயே தங்கி விடுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கும் சட்டம் இருக்கிறது.

Advertisement

இதனால் அங்கு நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்றுவிட்டால் அவர் இந்திய பாஸ்போர்ட்டை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதியாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பித்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுசில் குமார் மோடி பாராளுமன்றத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பாஸ்போர்ட்களை சமர்ப்பித்தவர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்தப் பட்டியலில் டெல்லியை சேர்ந்தவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 60,414 பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று தங்களது இந்திய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28,117 வேர் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்து இருக்கின்றனர். மேலும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 22,300 பேர் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.

இதற்கு முன்பில்லாத அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் மக்கள் வெளிநாட்டில் செட்டிலாகி இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சி அடைய வைக்கிறது. 2011 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 17.50 லட்ச மக்கள் இந்திய குடியுரிமையை துறந்து இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதாரப் பின்னடைவு அடிப்படை வசதிகள் மற்றும் வேலை வாய்ப்பின்மை ஆகியவை இந்த குடியேற்ற மாறுதல்களுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

Tags :
Advertisement