ISI | பாகிஸ்தான் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பின் தளபதி சுட்டுக் கொலை.!! ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு.!!
ISI: லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பின் தளபதி என்று அழைக்கப்படும் ஹாஜி அக்பர் அப்ரிடி, கைபர் மாவட்டத்தில் உள்ள பாராவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பதற்றமும் நிலவி வருகிறது. மேலும் வன்முறை மற்றும் தீவிரவாதம் பற்றிய அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பு தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கு பெயர் பெற்றது. பல்வேறு சமூகத்தினரிடையே அச்சுறுத்தல்களை வெளியிட்டு அச்சத்தைத் தூண்டும் வரலாற்றை இந்த அமைப்பு கொண்டுள்ளது. கடந்த காலங்களில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பு காஷ்மீர் பண்டிட்களை அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன்(ISI) அக்பருக்கு 2014-ம் ஆண்டு முதல் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காஷ்மீரி பண்டிட்களின் நிலை மிகுந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது. டோக்ரா ஆட்சியின் போது தீவிரவாதிகள் மற்றும் போராளிகளின் அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்களின் மக்கள்தொகை பல ஆண்டுகளாக கணிசமாகக் குறைந்துள்ளது.
1990களில் காஷ்மீர் பண்டிட் களின் வெளியேற்றம் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியது. ஜனவரி 1990 இல் நடந்த மோசமான நிகழ்வைத் தொடர்ந்து காஷ்மீர் பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது.