மகிழ்ச்சி...! பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச லேட்டாப் வழங்கப்படும்...! முதல்வர் அசத்தல் அறிவிப்பு...!
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கலின் பொழுது முதல்வர் என்.ரங்கசாமி, யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகத்தை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தும், என்றார்.
மற்றொரு முக்கிய முடிவானது, 21 முதல் 55 வயதுக்குட்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.1,000 வழங்க வருடாந்திர பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசாங்கத்தின் வேறு எந்த மாதாந்திர நிதியுதவியிலும் பயனடையாத பெண்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்று நிதி இலாகாவை வைத்திருக்கும் ரங்கசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு விரைவில் லேட்டாப் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.