முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நிலச்சரிவு எதிரொலி..!! திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நடைபெறுமா..? அமைச்சர் சேகர் பாபு உறுதி..!!

In the wake of the landslide in Tiruvannamalai, Minister Sekarbabu has made an important announcement regarding the Karthigai Deepam.
04:41 PM Dec 03, 2024 IST | Chella
Advertisement

திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கார்த்திகை தீபம் குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisement

திருவண்ணாமலையில் வரும் 13ஆம் தேதி திருக்கார்த்திகை அன்று தீபத்திருவிழாவும், மலை உச்சியில் மகாதீபமும் ஆண்டுதோறும் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழாவிற்காக சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

இதற்கிடையே தான், திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஐஐடி நிபுணர்கள், கனமழை நீடித்தால் மகாதீப மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக தீபத்திருவிழா நடக்குமா..? மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுமா..? என்ற சந்தேகம் பக்தர்களுக்கு எழுந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத்திருவிழாவை நடத்துவோம் என்றும், கிரிவலப் பாதையில் சேதம் ஏற்பட்டிருந்தால், இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : அலர்ஜியை உண்டாக்கும் 5 உணவுகள்..!! கட்டாயம் இதை தொடாதீங்க..!! மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!!

Tags :
அமைச்சர் சேகர்பாபுகார்த்திகை தீபம்திருவண்ணாமலை
Advertisement
Next Article