ரூ.100 கோடி மதிப்பிலான நிலம்..!! போலியாக பத்திரப்பதிவு செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!! ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு..!!
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல்துறை மற்றும் எஸ்பி அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இன்றைய தினம் இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறக்கப் போகிறது. ஏற்கனவே முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், இப்போது இடைக்கால முன் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் இன்றைய தினம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிலவியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீனும் மறுக்கப்பட்டதால் தலைமறைவாகிவிட்டார் எம்.ஆர். விஜயபாஸ்கர். எனவே, அவரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான், எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நிலமோசடி தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ள நிலையில், விஜயபாஸ்கர் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை முதலே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாளப்பட்டியில் யுவராஜ் வீட்டிலும், மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். வேலாயுதம் பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக யுவராஜ், செல்வராஜ், ரகு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உட்பட 13 பேர் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு ரெய்டு நடந்து வருகிறது.
Read More : ”எப்படி தாய் ஆனார் என்பது முக்கியமில்லை”..!! பெண் அதிகாரிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்..!!