முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு..! உய்ரநீதிமன்ற நீதிபதி வேதனை..!

Land grabbing with the help of raiders and politicians..! Supreme Court Judge Anguish..!
01:18 PM Aug 17, 2024 IST | Kathir
Advertisement

சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதுடன், மிரட்டல்கள் விடுக்கப்படுவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தி்ல் முழுக்க முழுக்க போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

Advertisement

வழக்காகி விசாரித்த நீதிபதி, நிலம் கார்த்திக்கிற்குச் சொந்தமானது என்பதற்கான அனைத்து முகாந்திரம் இருப்பது தெரிந்தும், போலீசார் கண்களை மூடிக்கொண்டு நிலத்தை அபகரிக்க உதவியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்போடு தொடர்புடைய கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர்?- என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

நில அபகரிப்பு வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருவது வேதனை தருவதாக நீதிபதி தெரிவித்தார். இதுபோன்ற நிலைமை தொடர்ந்தால், அப்பாவி பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குலைந்து விடும் எனவும், இது நில மாஃபியாக்களையும், ரவுடிகளையும் ஊக்குவிப்பது போலாகி விடும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நில அபகரிப்பு தொடர்பாக கார்த்தி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய நீதிபதி, சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
chennai high courtland grabbing
Advertisement
Next Article