For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நல குறைவு!. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Lalu Prasad Yadav's sudden health decline! Delhi AIIMS hospital admission!
06:49 AM Jul 24, 2024 IST | Kokila
லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நல குறைவு   டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
Advertisement

Lalu Prasad Yadav: ஆர்.ஜே.டி. , தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பின்னர் சிறிது நேரத்தில் சோர்வடைந்த அவருக்கு, உடல் சுகவீனம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது, உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த திங்கட் கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற ஜேடியுவின் நீண்டகால கோரிக்கையை மோடி அரசாங்கம் நிராகரித்தது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: தோண்ட தோண்ட வரும் சடலங்கள்!. பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!. நிலச்சரிவால் சோகம்!

Tags :
Advertisement