குலுங்கும் மதுரை - கள்ளழகரை காண குவிந்த லட்ச கணக்கான பக்தர்கள்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று(ஏப்ரல் 23) காலை நடைபெறுகிறது.
மிகவும் பிரசித்திப்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாக தொடங்கியது. தினம் ஒரு திருவிழாக் கோலம் பூண்டு மதுரை மாநகர் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஷ்வர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாண கோலத்தில், பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் மதுரை முக்கிய வீதிகளில் வீதிவுலா வந்தனர். மதுரையில் கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் தேரில் மீனாட்சி அம்மனும், சுந்தேரஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதனை தொடர்ந்து, கோயிலில் இருந்து கள்ளழகர், தனது சகோதரி மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரை நோக்கி புறப்பட்டார். அவரை மதுரை மாநகருக்குள் வரவேற்க எதிர்சேவை நிகழ்வு நிகழ்ந்தது.
பக்தர்கள் தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வணங்கினர். தங்கை மீனாட்சி திருமணம் முடிந்த செய்தியறிந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் நடைபெற உள்ளது. வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க உள்ளனர். இதை தரிசிப்பதற்காக லட்சக் கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். எனவே மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Read More: ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு : மு.க.ஸ்டாலின் கண்டனம்