திருமணமாகி கணவர் வீட்டிற்கு வரும் பெண்களே..!! இந்த வேலையை உடனே முடிச்சிருங்க..!! இல்லைனா சிக்கல் தான்..!!
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் மிக முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக அரசு தரும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் தேவை. வீட்டு முகவரி ஆவணமாக பல இடங்களில் ரேஷன் கார்டு கேட்கப்படுகிறது. இப்படியொரு முக்கியமான ஆவணத்தை அப்டேட்டுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
அதிலும், புதிதாக திருமணம் ஆனவர்கள் புதிய குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். அதேபோல், குழந்தைகளின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். புதிதாக திருமணம் ஆனவர்கள் உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் எப்படி சேர்ப்பது என்பது பற்றி தற்போது பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், தனி கார்டாக கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு முதலில் ஏற்கனவே உங்கள் பெயர் இருக்கும் ரேஷன் கார்ட்டில் இருந்து உறுப்பினரை நீக்க வேண்டும். அதிலிருந்து நீக்கிய பிறகே, புதிய கார்டிற்கு உங்களால் விண்ணப்பிக்க முடியும். இதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம் அல்லது அருகில் உள்ள இ-ஆதார் அலுவலகத்திற்கு சென்று அப்டேட் செய்யலாம். கணவர் வீட்டு கார்டில் மனைவியின் பெயரை இணைக்க வேண்டும் என்றால், மனைவியின் ஆதார் கார்டு விவரங்கள் போதுமானது. இல்லையென்றால், புதிதாக கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், கணவன் மற்றும் மனைவி இருவரும் முதலில் ஆதார் கார்டில் முகவரியை மாற்ற வேண்டும்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் இருக்கும் வீட்டின் முகவரியை ஆதார் கார்டில் மாற்றிய பின், இருவரின் ஆதார் கார்டை கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த சேவைகளை https://tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி செய்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும். அதே போல் குழந்தைகளின் பெயரை குடும்ப அட்டையுடன் இணைக்க குழந்தையின் பிறப்பு சான்றுதழ் போதுமானது.