திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களே உஷார்..!! ஏமாந்துறாதீங்க..!! இப்படியும் இருக்காங்க..!!
ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூர் வணங்கனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜா. இவர், திருமண தகவல் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவிட்டு, விவாகரத்தான பெண்களுக்கு வலைவீசி இருக்கிறார். இவர்களின் வலையில் விழும் பெண்களை லாவகமாக பேசி, ஓட்டலுக்கு வரவைத்து அவர்களின் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாவது இவரின் வாடிக்கையான செயல்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மதுரையில் இருக்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வெவ்வேறு சமயத்தில் பெண்களை வரவழைத்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தல்லாகுளம் மற்றும் கோ.புதூர் காவல் நிலையங்கள் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, பொறியியல் பட்டதாரி கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை காவல்துறையினர் பிடிக்க முயற்சித்தபோது, கீழே விழுந்து கால்களையும் உடைத்துக்கொண்டார்.