முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்களே!… இந்திய நாப்கினால் புற்றுநோய் ஆபத்து!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

05:25 AM Apr 27, 2024 IST | Kokila
Advertisement

Napkin: இந்தியாவில் தயாரிக்கப்படும் நாப்கின்களில் அதிகபட்சமாக ரசாயனம் கலப்பதாகவும் இதனால் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் இயற்கையான அதே சமயம் சவாலான பிரச்சனை மாதவிடாய். இந்த நாட்களில் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளோடு அலுவலக வேலைகள் என எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த இக்கட்டான சூழலில் உடல் உபாதைகளை எதிர்கொள்வது ஒரு சவால் என்றால் நாப்கின் நனைந்து விடுவதும், மாற்றுவதும் ஒரு கூடுதல் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் குறைந்தது 6 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின்களை மாற்ற வேண்டும் என்ற நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நாப்கின்கள் பயன்படுத்துவதால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் தொடை இடுக்கில் உராய்வினால் ஏற்படும் புண்கள் என பல இக்கட்டான நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர். இது தான் பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் என்றாலே பெரிய அலர்ஜியாக பார்க்க காரணம் என்றே சொல்லலாம்.

அந்தவகையில், பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் மொத்தமாக 10,000 முதல் 18,000 வரை நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் நேரத்தில் நாம் வாங்கும் நாப்கின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?அதில் என்னென்ன சேர்க்கப்படுகிறது?என்பதே யாருக்கும் தெரிவதில்லை.இந்த மாதிரியான சுகாதாரமற்ற நாப்கினை நாம் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம்.

ஆண் மற்றும் பெண் இருவருக்குமே பிறப்புறுப்பில் ஏற்படும் புற்றுநோய். மலட்டுத்தன்மை . இதை நுகரும் பிராணிகளுக்கு ஏற்படும் வித்தியாசமான நோய்கள். சாதரணமாக ஏற்படும் இரத்தப்போக்கை விட அதிகமான இரத்தப்போக்கு. கருப்பை கோளாறு. அதுமட்டுமில்லாமல் தலைவலி,தீராத காய்ச்சல்,உடல் உபாதைகள்,தோல் தொடர்பான நோய்களும் ஏற்படுத்துகிறது.மேலும் பசியின்மை,இரத்த அழுத்தம்,பக்கவாதம்,மூளை தொடர்பான நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

இது தொடர்பாக பெண்கள் அதிகமான ஆபத்தை சந்தித்து வருகின்றனர்.கர்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படவும் இந்த நாப்கினே அதிக காரணமாக இருக்கின்றன. இந்தியாயாவில் தயாரிக்கப்படும் நாப்கினில் அதிகபட்சமாக ரசாயனம் கலப்பதாகவும் இதனால் பெண்களுக்கு உடல் உபாதை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் சமீபத்தில் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன. முடிந்த அளவுக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மற்றும் டயப்பர் காட்டனாக இருப்பது நல்லது என உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Readmore: எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்றால் என்ன.? அதை உடைப்பதற்கு WhatsApp ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது.? விரிவான விளக்கம்.!!

Advertisement
Next Article