முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! அஞ்சல் துறையில் சூப்பர் திட்டம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

03:01 PM Apr 16, 2024 IST | Chella
Advertisement

இந்திய அஞ்சல் துறையானது பெண்களுக்கென தனியாக சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

இந்திய அஞ்சல் துறையானது, பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் கால அளவிலான முதலீடு கொண்ட இத்திட்டமானது, பெண்களை பண அளவில் மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெண்களுக்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள் முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்ட முடியும். மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் தபால் அலுவலகத்தின் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியதில்லை. இதில் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 2 ஆண்டுகளில் முதலீட்டிற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை பெறலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும் அரசு வரி விலக்கு அளித்து வருகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெண்களுக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களும் தங்கள் கணக்குகளைத் தொடங்கலாம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் கீழ், 2 ஆண்டுகளுக்கு 7.5% வட்டி வழங்கப்படும்.

ஆகையால், ஒருமுறை ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதல் ஆண்டில் ரூ.15,000 மற்றும் 2-வது ஆண்டில் ரூ.16,125 வருமானம் கிடைக்கும். அதாவது இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் முதலீட்டில் திட்டத்தின் கீழ் ரூ.31,125 வட்டி வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நீங்கள் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கணுமா..? இதை படிச்சா உங்களுக்கே ஒரு ஐடியா வரும்..!!

Advertisement
Next Article