கர்ப்பிணி பெண்களே..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா..?
கருவுற்ற பெண்களுக்கு ரூ.6,000 மத்திய அரசு கொடுக்கும் உதவித்தொகையை பெற ஆதார் கார்டு கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.6,000 உதவித்தொகை பெற என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய நிதியுதவியுடன் கூடிய பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு திட்டமான மிஷன் சக்தியின் துணை திட்டம்தான் இது. கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு வகையான நோய்களையும் தடுக்க பிறக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு கர்ப்பிணிகளுக்கு குறைந்தபட்சம் 19 வயது இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது, நேரில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 3 தவணைகளில் பணம் கிடைக்கும்.
முதல் தவணை ரூ.1000, இரண்டாவது தவணை ரூ.2,000, மூன்றாவது தவணை ரூ.3,000 என பணம் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டம் குறித்த கூடுதல் தகவலுக்கு https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் பெண்கள் ஏதாவது பிரச்சனையை சந்திக்க நேர்ந்தால், 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். உங்களிடம் பிபிஎல் ரேஷன் கார்டு அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு இருந்தால், இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.