பெண்களே உஷார்!. ஹை ஹீல்ஸ் அணிவதால் முதுகுத் தண்டில் இத்தனை பாதிப்புகள் ஏற்படுகிறதா?.
High heels: இன்றைய நவீன காலத்திற்கேற்ப பெண்கள் ஹீல்ஸ் அணிவது ஃபேஷன் என்று நினைத்து தினமும் ஆடைக்கேற்றபடி அணிகின்றனர். ஹை ஹீல்ஸ் ஸ்டைலாக இருக்கும். ஆனால் இவை கால்கள் மற்றும் கணுக்கால் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இல்லை. இவை கால் கன்றுகளில் புண், கால் வலி, தசைநார்கள் வலுவிழந்து கால்விரல்கள் சிதைந்துவிடும். குறிப்பாக காலணிகள் பொருத்தமற்றதாக இறுக்கமாக இருந்தால் இந்த பிரச்சனைகள் இன்னும் பெரிதாக இருக்கும். இதனோடு முழங்கால் வலி, கீழ் முதுகு வலி மற்றும் தோரணையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
ஹை ஹீல்ஸ் அணியும் போது உடல் ஈர்ப்பு மையத்தை முன்னோக்கி கொண்டு வருகிறது. சமநிலையில் இருக்க கீழ் முதுகில் வளைக்க வேண்டியிருக்கும். இதனால் முதுகில் உள்ள மூட்டுகள் சுருக்கி, முதுகு நீட்டிப்பு தசைகளை கடினமாக்கலாம். முதுகு வலி வந்தால் ஹை ஹீல்ஸ் அணிவது பற்றி யோசியுங்கள்.ஹை ஹீல்ஸ் அணிவதால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக, கால்கள், இடுப்பு மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்து போகலாம். இது தவிர, தோரணை கெட்டுவிடும்.
ஹை ஹீல்ஸ் அணியும் போது சமமான பரப்பில் மட்டுமே நடக்க வேண்டி இருக்கும். குழிகள், புடைப்புகள், கற்கள் இருக்கும் இடங்களில் நடந்தால் கணுக்கால் நழுவக்கூடும். இதனால் சுளுக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. கணுக்கால் சுளுக்கு உடன் கணுக்கால் உடைந்து முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் காயம் உண்டாகலாம். மோசமாக விழும்போது மூளை அதிர்ச்சி கூட உண்டாகலாம். நீங்கள் எங்கே போகிறீர்கள் அந்த இடத்தில் சூழல் பொறுத்து உங்கள் காலணிகளை தேர்வு செய்வது அவசியம்.
ஹை ஹீல்ஸ் அணிவதன் மூலம் கால்களின் வடிவமைப்பு மாறலாம். நாள் முழுவதும் நீண்ட நேரம் அணியும் போது சுழற்சி பிரச்சனைகள் வரும். கால் விரல்கள், உள்ளங்கால் வளைவு அல்லது குதிகால் போன்றவற்றில் கூர்மையான வலியை நீங்கள் உணரலாம். ஹை ஹீல்ஸ் கால்வலிகள் மோசமானவை. கீல்வாத நோய் யூரிக் அமில தேக்கத்தால் வருகிறது என்றாலும் அதன் அபாயத்தை தூண்டுவதில் ஹை ஹீல்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. காலின் மோசமான வளைவு முழங்கால் மூட்டில் அதிக அழுத்தத்தை உண்டு செய்கிறது. இதனால் கீல்வாத நோய்களுக்கு வழிவகுக்கிறது.
கால்விரலின் நடு மூட்டு வளைவு காரணமாக ஹேம்மெர் டோ உருவகிறது. இது பெரும்பாலும் பொருத்தமற்ற காலணிகளை அணிவதால் ஏற்படுகிறது. இது பெருவிரலுக்கு அடுத்துள்ள கால்விரலை பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட கால்விரல் வலி அல்லது நகர்த்த கடினமாக இருக்கலாம். இரத்த நாளங்கள் மற்றும் முதுகில் ஏற்படும் சிரமம் போன்றவை பாதத்தின் சிதைவை உண்டு செய்கிறது. இது சுத்தியல் கால் என்று அழைக்கப்படுகிறது. கால்களில் காயங்களில் இருந்து பாதுகாக்க இந்த ஹை ஹீல்ஸ் தவிர்க்க வேண்டும். தசைநார் வலுவிழப்பது ஹை ஹீல்ஸின் மற்றொரு முக்கியமான பக்கவிளைவு ஆகும். ஹை ஹீல்ஸி தொடர்ச்சியான நீடித்த பயன்பாடு தசைநார் வலிமையை பாதிக்கலாம்.