புதிய ரயில் பாதை...! நீலகிரி தொகுதிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்ட எல்.முருகன்...!
நீலகிரி தொகுதிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்ட எல்.முருகன்.
நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். தொகுதிக்கு தற்பொழுது தனியாக தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அதில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முகாம் அலுவலகம் திறக்கப்படும், 6 தொகுதிகளிலும் மகளிருக்கு தனி கல்லூரி அமைக்கப்படும். உதகையில் சர்வதேச தரத்தில் தொழில்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். உதகையில் மூடப்பட்ட எச் பி எஃப் தொழிற்சாலையில் ஐடி பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்ல இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும். தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நிரந்தர தீர்வு கொடுக்கப்படும். பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை. அவிநாசி பகுதியில் ஐடி பூங்கா கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.