குவைத் தீவிபத்து..!! தமிழர்களின் நிலை என்ன..? 5 பேர் பலி..? அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!!
குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றைய தினம் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. குவைத் தீவிபத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை குவைத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கே.வி. சிங் விரைந்தார். பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டால் மட்டுமே உடல்கள் யாருடையது என தெரியவரும்.
இந்த தீவிபத்தில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 3 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு, தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் இறந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 5 பேராவது இறந்திருப்பர் என குவைத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடலூரை சேர்ந்த சின்னதுரை, பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்டு, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென்று தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் மனவேதனையில் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
Read More : பிரபல அமேசான் நிறுவனத்தில் வேலை..!! அதுவும் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?