For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Kuwait தீவிபத்து..!! 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தது..!! இன்று நல்லடக்கம்..!!

The bodies of 7 Tamils ​​who died in the Kuwait fire arrived at their hometowns.
07:12 AM Jun 15, 2024 IST | Chella
kuwait தீவிபத்து     7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தது     இன்று நல்லடக்கம்
Advertisement

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர். கடந்த 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும், பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு வரப்பட்ட நிலையில், 7 தமிழர்களின் உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க அமைச்சர் செஞ்சி
மஸ்தான் கொச்சின் சென்றிருந்தார். இதேபோல கேரள மாநில முதலமைச்சரான பினராயி விஜயனும் கொச்சி விமான நிலையம் சென்றார்.

இதனைத் தொடர்ந்து அங்கு மரியாதை செலுத்திய பின், சொந்த ஊர்களுக்கு உடல்கள் எடுத்து செல்லப்பட்டது. உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் தனித் தனி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நள்ளிரவு சொந்த ஊர்களுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர்களது உடல்கள் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிஃபின் உடல் நள்ளிரவு செஞ்சி வந்தடைந்த நிலையில், இன்று காலை தேசூர்பாட்டை பகுதியில் உள்ள பத்தா பள்ளிவாசலில் தொழுகை நடத்திய பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! மத்திய அரசின் இந்த சூப்பர் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Tags :
Advertisement