குவைத் தீவிபத்து!. பலியான இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்!. பிரதமர் மோடி இரங்கல்!
Kuwait fire: குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 40 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குவைத்தில் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்காக குவைத் விரைந்தார் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங். இந்நிலையில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவை சேர்ந்த 11 பேர் உட்பட 40 இந்தியர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Readmore: VIRAL | ‘ஓடும் இரயிலில் காதல் ஜோடி சில்மிஷம்’அதிர்ச்சியில் உடைந்த சக பயணிகள்.!!