'41 பேரை காவு வாங்கிய குவைத் தீ விபத்து!' பிரதமர் மோடி இரங்கல்..
குவைத் நாட்டில் மங்காஃப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குவைத் தீ விபத்தில் இறந்தோருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது” எனவும் அந்த பதிவில் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, குவைத் தீ விபத்தில் இறந்தோருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், “குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள இந்திய தூதரகம் நிலமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம்.
மேலும் இது குறித்த தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய விரும்புகிறேன். இது தொடர்பாக இந்திய தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Read more ; நர்மதா நதி ஏன் “கன்னி நதி” என்று அழைக்கப்படுகிறது? முழு விவரம் இதோ!!