முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Kuvathur | மேலும் சில நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேனா..? யூடியூப் சேனல்கள் மீது நடிகர் கருணாஸ் புகார்..!!

11:52 AM Feb 24, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கூவத்தூர் விவகாரம் தொடர்பாக தன் மீது அவதூறு பரப்புவர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூ அளித்திருந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தன் மீது அவதூறு பரப்பியதற்காக ஏ.வி. ராஜூவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் கருணாஸூம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அருவருக்கத் தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பிய ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார். இந்நிலையில், நடிகர் கருணாஸ் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த முறை யூடியூப் சேனலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த புகாரில், ”நடிகை த்ரிஷா மற்றும் இன்னும் சில நடிகைகளையும் நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். என் மீது பொய்யான தகவல் பரப்பி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Read More : Annapoorna Scheme | சுயதொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடனுதவி..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

Advertisement
Next Article