For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அம்மன் படத்தில் வந்த குட்டி அம்மனை நியாபகம் இருக்கா? - வைரலாகும் குட்டி அம்மன் புகைப்படம்!!

05:43 PM Apr 03, 2024 IST | Mari Thangam
அம்மன் படத்தில் வந்த குட்டி அம்மனை நியாபகம் இருக்கா    வைரலாகும் குட்டி அம்மன் புகைப்படம்
Advertisement

அம்மன் திரைப்படத்தில் குழந்தை அம்மனாக நடித்த நடிகை சுனைனா பாதமின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஒரு காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் சாமி படங்களும் ஹிட் கொடுத்து வந்தது.  90ஸ் கிட்ஸ்களுக்கு சாமி படம் என்றாலே முதலில் நியாபகம் வருவது அம்மன் திரைப்படம் தான், அதேபோல் சாமி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் என மக்கள் கொண்டாடினார்கள். 1995 ஆம் ஆண்டு ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் கிராபிக்ஸுக்கு மட்டுமே ரூ. 80 லட்சம் செலவு என கூறப்படுகிறது.

இதில் அம்மன் வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை போல குழந்தை அம்மனாக நடித்து ஒரு சிறுமி அசத்தியிருப்பார்.

அந்த குழந்தையின் பெயர் சுனைனா பாதம், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் அம்மன் படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1996ம் ஆண்டு படம் நடித்தவர். அதன்பிறகு சினிமா பக்கம் அவரை காணவில்லை. பின் திருமணம், குழந்தைக்கு பிறகு ப்ராஸ்டேட்ட வுமன் என்ற வெப் சீரிஸில் நடித்தார், அதைத்தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரீஸில் நடித்து வருகிறார்.

சமந்தாவின் ஓ பேபி, அஜித்தின் வலிமை போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Tags :
Advertisement