முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குர்குரே வாங்கி தர மறுத்த கணவன்.... கணவனை பிரிந்து சென்ற மனைவி.... அதிர்ச்சி சம்பவம்.....

10:50 AM May 15, 2024 IST | shyamala
Advertisement

உ.பி.யில் கணவன் குர்குரே வாங்கி தர மறுத்ததால், கணவனை மனைவி பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாக குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளை கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே  தயாராகிறதுகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் இன்றளவும் குர்குரே அதிகம் விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கிட்டத்தட்ட குர்குரேவுக்கு அடிமையான அந்த பெண் தனக்கு தினமும் ஒரு பாக்கெட் குர்குரே வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன், ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார்.

இதனால், கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு அப்பெண் வெளியேறியுள்ளார். பின்னர், காவல் நிலையத்துக்கு சென்ற அப்பெண், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக முறையிட்டுள்ளார். ஆனால், கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு குர்குரே மீது இருந்த அதீத நாட்டமே அவர் கணவரை பிரிய காரணம் தெரியவந்துள்ளது.

ரூ. 87,000 செலுத்தியதில் 1 ரூபாய் கேஷ்பேக்!… கோபமடைந்த பயனர்!… நிறுவனம் மீது வழக்கு!

Advertisement
Next Article