முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீங்க யூடியூப் சேனல் வெச்சிருக்கீங்களா..? இனி மொத்தமாக மாறப்போகுது..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

A case has been filed in Madras High Court to regulate and regulate YouTube channels.
07:04 AM Aug 06, 2024 IST | Chella
Advertisement

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறை வகுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. யூடியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக்கூறி, சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால், காவல்துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது.

Advertisement

யூடியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை. இதனால், பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூடியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது, யூடியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று தமிழ்நாடு அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.

Read More : ஹெலிகாப்டரில் தப்பியோடிய வங்கதேச பிரதமர்..!! இந்தியாவில் தஞ்சம்..!! எந்த மாநிலத்தில் தெரியுமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

Tags :
Youtubeசென்னை உயர்நீதிமன்றம்மத்திய அரசுயூடியூப் சேனல்
Advertisement
Next Article