உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் புளி..!! முன்னோர்கள் பயன்படுத்திய டிப்ஸ் இதோ உங்களுக்காக..!!
தென்னிந்திய சமையல்களில் புளி ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது, புளி சாதம், மீன் குழம்பு, ரசம் என பல உணவுகளின் முக்கிய பொருள் புளி. வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களில் அரிசி, பருப்புக்கு அடுத்த இடம் இந்த புளிக்கு உண்டு. புளியின் சுவை மற்றும் அதன் பல மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால் குடம்புளி பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? வாருங்கள் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர்கள் சமையலுக்கு குடம்புளியைப் பயன்படுத்தியுள்ளனர். உடல் எடையைக் குறைக்கும், இதயத்தைக் காக்கும், மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும் ஆற்றல் பெற்றது குடம்புளி. இதற்கு, கொடம்புளி, கொருக்காப்புளி, கொக்கம்புளி, சீமை கொறுக்காய், மலபார்புளி எனப் பல பெயர்கள் உள்ளன. குடம்புளி செரிமான உறுப்புகளைத் தூண்டி, அவற்றின் சக்தியை அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்கும் மருந்து வகைகளில், மிக முக்கியமான மூலப் பொருளாக குடம்புளி பயன்படுத்தப்படுகிறது.
இதிலுள்ள `ஹைட்ராக்ஸிசிட்ரிக் ஆசிட்’ (Hydroxycitric Acid) இதயத்தைக் காக்கக்கூடியது. நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இந்த மாற்றம் தடுக்கப்படுவதால் கார்போஹைட்ரேட் ஆக்ஸிடையாகி கிளைகோஜெனாக உடலில் சேமிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் விளைவால் பசி குறைந்து இயல்பாகவே உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். அத்துடன் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி, மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். தசைகளையும் தசைநார்களையும் உறுதியாக்கி ஆற்றலை அதிகரிக்கும்; ரத்தக் கொழுப்பைக் கரைக்க உதவும். கொழுப்பைக் கரைப்பதில் குடம்புளி முக்கியப் பங்கு வகிப்பதால், டயட் இருப்பவர்கள் இதை தாராளமாய் பயன்படுத்தலாம்.
குடம்புளியின் துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாகத் தரப்படுகிறது. இதன் பழத்தோலில் தயாரிக்கப்படும் ஜூஸ், வாதம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்குச் சிறந்த மருந்து. குடம்புளியை அவ்வப்போது சமையலில் சேர்த்து வந்தால், முதுமைக் காலத்தில் ஏற்படும் மூட்டுவலி, அழற்சி, கல்லீரல் பாதிப்பு பிரச்சனைகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
Read More : 5 ஏக்கர் நிலம், கார், டிராக்டர் இருந்தும் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுகிறார்களா..? உடனே புகாரளிக்கலாம்..!!