முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு: 3 தோட்டாக்களுடன் இந்து சேனா தலைவருக்கு கொலை மிரட்டல்.!

06:51 PM Feb 03, 2024 IST | 1newsnationuser4
Advertisement

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில் இருந்து விலகுமாறு இந்து சேனா அமைப்பின் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கொலை மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

Advertisement

இந்து சேனா அமைப்பின் தலைவராக இருப்பவர் விக்ரம் குப்தா. இவர் கிருஷ்ணஜன்ம பூமி வழக்கு தொடர்பாக தீவிரமாக போராடி வருகிறார். இந்நிலையில் அந்த வழக்கிலிருந்து வாபஸ் பெறுமாறு மர்ம நபர்கள் தன்னை மிரட்டியதாக டெல்லி காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஈத்கா மசூதி கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ணா ஜென்ம பூமி எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ரிபப்ளிக் தொலைக்காட்சியில் தனக்கு வந்த மிரட்டல் கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார். அந்தக் கடிதத்தில் பாபர் மசூதி தொடங்கி பல பள்ளிவாசல்களை தியாகம் செய்து விட்டோம். இனி ஒரு பள்ளிவாசலையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என எழுதப்பட்டிருக்கிறது. மேலும் 3 தோட்டாக்களையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ள மர்ம நபர்கள் 4-வது தோட்டா விஷ்ணு குப்தாவின் தலையில் இறங்கும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தொலைக்காட்சியில் பேட்டி அளித்த விக்ரம் குப்தா "என்ன நடந்தாலும் கிருஷ்ணஜன்ம பூமி வழக்கிலிருந்து பின்வாங்க போவதில்லை" என தெரிவித்துள்ளார். மேலும் கிருஷ்ண ஜென்ம பூமி தொடர்பான வழக்கில் சட்டப்படி போராடி வெற்றி பெற்றே தீருவேன் எனவும் கூறியிருக்கிறார். சட்டப்படி ஈத்கா பள்ளிவாசலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கிருஷ்ணர் கோவில் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :
Death ThreatenHindu SenaKrishna janma BhoomiMadhurapolice complaint
Advertisement
Next Article