For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

KPY பாலா - ராகவா லாரன்ஸ் செய்த செயல்! குவியும் பாராட்டு!

04:21 PM Apr 03, 2024 IST | Baskar
kpy பாலா   ராகவா லாரன்ஸ் செய்த செயல்  குவியும் பாராட்டு
Advertisement

கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.  ஸ்டாண்ட் அப் காமெடியன், நடிகர் என்பதை தாண்டி தனது சமூகநல செயல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Advertisement

தனது வருமானத்தில் இருந்து பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் செலவழித்து வருகிறார். குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட போது 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார் பாலா. இப்படி பல உதவிகளை செய்து வரும் பாலா சமீபத்தில் கூட பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.

பாலாவின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், இனி அவர் செய்யும் அனைத்து நலத்திட்ட உதவியிலும் தனது பங்கு இருக்கும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் KPY பாலா – ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வரும் முருகம்மாள் என்ற பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தனர்.

இந்த நிலையில் கண் பார்வை இழந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பாலா - ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து பண உதவி வழங்கி உள்ளனர். இதுகுறித்த வீடியோவை பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாதேஸ்வரன் என்ற சிறுவன் சிறு வயதிலேயே கண் பார்வையை இழந்துவிட்டதாகவும், ஆனால் அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரின் தந்தையிடம் பணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் அறுவை சிகிச்சை செய்தால் சிறுவனுக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே தானும் ராகவால் லாரன்ஸும் இணைந்து அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பண உதவி செய்ததாகவும் பாலா குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பாலா - லாரன்ஸ் இருவருக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertisement