அது எப்படி வாத்தியாரே.. புகழ் நடிகர் கோதண்டராமன் காலமானார்..! தமிழ் சினிமாவில் சோகம்
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் கோதண்டராமன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் மட்டுமின்றி, சுந்தர்.சி-யின் கலகலப்பு திரைப்படத்தில் பேய் என்ற காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தில் சந்தானத்தின் குழுவில் ஒரு நபராக வந்து அத்தனை நகைச்சுவை செய்திருப்பார். அவரின் காமெடி காட்சிகள் மீம்களாக இணையத்தை ஆக்கிரமித்தன. இப்போதும் ‘கலகலப்பு’ படத்தில் அவரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்க தவறுவதில்லை.
இந்த நிலையில் தான், கோதண்டராமன் காலமானார் என்கிற செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 65 வயதான கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது. இவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடித்த படங்கள் : ராம்கி நடித்த ‘எல்லாமே என் பொண்டாட்டி தான்’, முரளி, சிவாஜி நடித்த ‘எல்லாமே என் ராசாதான்’, ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். மேலும், பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 2012ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘கலகலப்பு’ திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்தார் கோதண்டராமன்.
Read more ; நெல்லை அரசு மருத்துவமனையில் வேலை.. ரூ.60 ஆயிரம் சம்பளம்.. செம சான்ஸ்! விட்றாதீங்க..