இதை தெரிஞ்சுக்கோங்க.? கொரியன் பெண்களின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதமான முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர். எடையை குறைக்க மருந்துகள், உடற்பயிற்சி, டயட் முறைகள் என பலவகைகள் உள்ளன. உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும் மன அழுத்தத்தாலும், உணவு கட்டுப்பாடு இல்லாததனாலும், நோய் பாதிப்புகளினாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
இதன்படி ஊட்டச்சத்தான உணவுகளோடு, உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். ஆனால் பலருக்கும் உடல் எடை குறைப்பது மிகப்பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் கொரியன் பெண்களின் உடல் எடையை எவ்வாறு கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கின்றனர் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?
1. பார்லி டீ - கொரியாவில் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது பார்லி டீ. கொரிய பெண்கள் அதிகமானோர் உடல் எடையை குறைப்பதற்கு பார்லி டீ குடித்து வருகின்றனர்.
2. கிரீன் டீ - இந்தியாவில் கிரீன் டீ பிரபலமானதாக இருந்தாலும் அதிகமானோர் இதை குடிக்க விரும்புவதில்லை. ஆனால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடலுக்கு தேவையான மெட்டபாலிசம் இதில் கிடைக்கிறது.
3. யூஜி டீ - கொரியாவின் பாரம்பரிய டீயான இது யுஜா பழம் மற்றும் கொரியன் சிட்ரான் பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த டீயை குடிப்பதன் மூலம் உடலின் எடையை குறைக்கலாம்.
4. ரோஸ் டீ - குங்குமப்பூ மற்றும் ரோஜாவின் இதழ்களில் இருந்து செய்யப்படும் இந்த டீ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, உடல் எடையும் குறையும். சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளோடு இந்த தேநீர் அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.