For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கூமுட்டை..!! சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ..!! விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்..!!

It is noteworthy that Seeman, who strongly opposes DMK and Dravida, is strongly opposing this theory of Vijay.
07:44 AM Nov 02, 2024 IST | Chella
கூமுட்டை     சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ     விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்
Advertisement

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி, தனது முதல் மாநாட்டில் கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்து அறிவித்தார். அப்போது திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று கூறினார். ஆரம்ப காலம் முதலே விஜய்யை ஆதரித்து வந்த சீமானுக்கு, விஜய் திராவிடத்தை ஆதரிப்பாக கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை மிக கடுமையாகத் தாக்கி பேசினார். அவர் பேசுகையில், ”என் இன பாலகன் இறந்துவிட்டான் எனத் துடித்து அழுவது தமிழ் தேசியம். என் தங்கை இசைப்பிரியா கொல்லப்பட்டு கிடந்தபோது துடித்து அழுதது தமிழ் தேசியம். தூர இருந்து ரசித்து சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா? உடம்பிலே நெருப்பைக் கொட்டி வெந்தது வீரத்தமிழ் மகன் முத்துக்குமார். அது தமிழ் தேசிய பெருநெருப்பு.

கடற்கரையிலே தலைக்கு ஒரு குளிரூட்டி, காலுக்கு ஒரு குளிரூட்டி, தலைமாட்டிலே மனைவி. கால்மாட்டிலே துணைவி என்று போலி உண்ணாவிரத நாடகம் நடத்துவது திராவிடம். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்று தமிழர்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்பது திராவிடம். தண்ணீர் தர மறுக்கும் அவனுக்கு ஒரு சீட்டும் இல்லை. உன்னுடன் தேர்தல் கூட்டும் இல்லை என்று சொல் என சொல்லுவது தமிழ் தேசியம்.

உன் கொள்கைகள் என்ன? கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. ஒன்னு சாலையில் அந்த பக்கம் நில்லு. இல்ல இந்த பக்கம் நில்லு. நீ நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப் போயிடுவ. விடுதலைப் போராட்டத்தில் மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் பக்கம் நில்லு. இல்ல மவுண்ட் பேட்டன் பக்கம் நில்லு. நான் நடுநிலை என்கிறாய். இது நடுநிலை அல்ல. மிகவும் கொடு நிலை. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. வந்தாச்சு. நான் என் கருவிலே என் எதிரி யார்? என்று தீர்மானித்துவிட்டு பிறந்தவன். எவன் என் இனப்பகைவன் என்று முடிவெடுத்துவிட்டு வந்தவன்” என்று பேசினார்.

நாம் தமிழர் கட்சியையும், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் விதமாக விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என்று கூறியிருந்தார். ஆனால், திமுகவையும், திராவிடத்தையும் மிக கடுமையாக எதிர்க்கும் சீமான், விஜய்யின் இந்த கோட்பாட்டை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.35,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Advertisement