முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இப்போ கொங்கு மண்டலம் மாறிவிட்டது!… நிச்சயம் பாஜக தான்!... திமுக சும்மா பழைய காலத்து பேச்சை பேசிட்டு இருக்காங்க!... Annamalai!

05:30 AM Mar 09, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Annamalai: கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பாக திமுக அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. திமுகவின் அயலக அணியில் இருந்தவர் தான் ஜாபர் சாதிக். இருப்பினும் இதுகுறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார். ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை ஏன் உதயநிதி ஸ்டாலின் டெலிட் செய்தார். இதில் திமுக டிஜிபியை பலிகடா ஆக்க பார்க்கிறது.

சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. மீண்டும் பாஜக தலைமையில் மத்திய அரசு அமையும் போது அனைத்து பிரச்னைகளும் தீரும். கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. மீண்டும் பாஜக தலைமையில் மத்திய அரசு அமையும் போது அனைத்து பிரச்னைகளும் தீரும். கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு. கோவை மட்டுமல்லாமல், பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்பினாலும், ஒரு மாநிலத் தலைவராக எனக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு, வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். தமிழகத்தில் திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ளது. இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் வந்துள்ளது திமுகவுக்கு தான். “ என்றார்.

Readmore: NEET நுழைவு தேர்வு!… இன்றே கடைசி நாள்!… மிஸ் பண்ணிடாதீங்க!

Tags :
annamalaiகொங்கு மண்டலம் மாறிவிட்டதுநிச்சயம் பாஜக தான்
Advertisement
Next Article