கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்..!! களத்தில் இறங்கிய மத்தியப் படை..!! மருத்துவமனையில் பரபரப்பு..!!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்தியப் படை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மருத்துவமனையில் சிஐஎஸ்எப் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் 31 வயதான பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது தொடர்பான வழக்கை டெல்லி சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ”கடந்த 15ஆம் தேதி அதிகாலையில் ஒரு கும்பல் ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்குள் புகுந்து 2 தளங்களில் மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற பொருட்களை சேதப்படுத்திய நிலையில், அதுகுறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள கொல்கத்தா காவல்துறை தயார் நிலையில் இல்லை என்று கவலை தெரிவித்தனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி வன்முறைக்கு பிறகு பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதாக கூறிய நீதிபதிகள், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது அவசியம்” என்று தெரிவித்தனர். அப்போது மருத்துவமனை வளாகத்திற்கு மத்தியப் படைகள் பாதுகாப்பு அளிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதி அளித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றம், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை பாதுகாக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் அதிகாரிகள் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். பாதுகாப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Read More : எனக்கு 4 புருஷனா..? ஏன் உங்களுக்கு தெரியாதா சீமான்..? பெண் பாவம் பொல்லாதது..!! விளாசிய விஜயலட்சுமி..!!